வெயில் சுடுதே!
பூமியில் கரியமில வாயு அதிகமானால் வாயு மண்டலத்தில் அதன் அளவு அதிகரிக்கும். அதனால் பூமியின் வெப்ப நிலை உயரும். நாம் உருவாக்கும் கரியமில வாயு வளி மண்டலத்தில் 200 வருடங்கள் வரை இருக்கும்.1860 ஆம் ஆண்டு முதல் வெப்ப நிலை அளக்கும் முறை ஏற்பட்டது. அப்போது பூமியின் சராசரி வெப்ப நிலை அளவு 0.78 செல்சியசாக இருந்தது.கரியமில வாயுவின் அடர்த்தியை PPMV (parts per million by volume) என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள். கரியமில வாயுவின் அடர்த்தி, 1860 - 2801990 - 350 2008 - 405என அளவிட்டதிலிருந்து அதிகரித்தே வந்துள்ளது. வெப்ப நிலை அதிகரித்தால் வெயில் காலம் அதிகரிக்கும். குளிர்காலம் குறையும். சீரற்ற மழை, விவசாய பாதிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, வெள்ளம் அதிகரித்தல், சூறாவளி அதிகமாக வீசும். ஆர்டிக், அன்டார்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும்.வாகனங்கள் வெளியிடும் புகையினால் மட்டும் அல்ல, ஸ்டீல் பொருட்கள் உற்பத்தி, சிமெண்ட், அலுமினிய தொழிற்சாலைகளினால் கரியமில வாயு அதிகரிக்கிறது. மரங்கள் கரியமில வாயுவை எடுத்துக்கொள்கின்றன. நாம் அந்த மரங்களை அழிப்பதன் வாயிலாக கரியமில வாயு பூமியில் அதிகரிக்கிறது.முடிந்த அளவு நம் தேவைகளுக்கு மாற்று வழியை யோசிக்க வேண்டும். மின்சாரத்தையும் காற்று, சூரிய ஒளியில் இருந்து தயாரித்துக்கொள்ள வேண்டும். மின் தேவையை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை குறைவாக செலவழிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினால் கரியமில வாயுவின் அதிகரிப்பை குறைக்கலாம்.