உள்ளூர் செய்திகள்

வெண்ணாந்தை

தமிழ்ப் பெயர்: கூகை ஆந்தை அல்லது வெண்ணாந்தைஆங்கிலப் பெயர்: பார்ன் அவுல் (Barn owl) உயிரியல் பெயர்: டைடோ ஆல்பா (Tyto alba)அளவு: 32 முதல் 40 செ.மீ. கூகை ஆந்தைகளை எப்போதும், அதிசய வெளிநாட்டுப் பறவை என்றே பலரும் நினைப்பார்கள். ஏனெனில், மற்ற வகை ஆந்தைகளைவிட, இது சற்று வித்தியாசமாகக் காணப்படும். நம் நாட்டில் இந்த வகை ஆந்தைகள், காஷ்மீர், இராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா ஆகிய பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் காணப்படும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் கூகை ஆந்தைகளைக் காணலாம். முக்கோண வடிவ முகத்தில் அடர் பழுப்பு நிற பட்டைகள் கண்ணின் மேற்புறம் தொடங்கி கீழ் வரை இறங்கும். பழுப்பு நிற உடலில் அடர் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். சத்தமில்லாமல் பறக்கும் இயல்புடையது, கூகை ஆந்தை. இத்திறனால், ஓர் இரவில் சுமார் 8 எலிகளைப் பிடித்து உண்ணும். நகரங்களிலும் இந்த வகை ஆந்தைகளைக் காண முடியும். பழைய வீடுகள், கோட்டைகள், பாழடைந்த கட்டடங்கள் என, நகரம் சார்ந்த பகுதிகளில் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளும். இதுபோன்ற பாதுகாப்பான இடங்களில் வாழும் ஆந்தைகள், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்து, 4 முதல் 7 முட்டைகள் வரை இடும். கூகை ஆந்தைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. விவசாய நிலங்களில் எலிகளைப் பிடிப்பதில் ஆந்தைகளுக்கும் பங்குண்டு. ஆனால், மக்கள் சிலர் ஆந்தைகளை அபசகுணமாக நினைத்துக் கொல்கின்றனர். இந்த வகை ஆந்தைகள் அழிவின் விளிம்பில் உள்ளன.- ஷண்முகானந்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !