உள்ளூர் செய்திகள்

வெளவால்

தகுந்த வரத்தை வாங்கிடவாதலைகீழாகத் தொங்குகிறாய்?பகலில் எவரோ திட்டினரா? இரவில் மட்டும் சுற்றுகிறாய்.குடைபோல் சிறகை விரித்தபடிகுழந்தை போலே ஆடுகிறாய்.குட்டிச் சத்தம் கேட்டாலும்'கூகீ' என்றே கத்துகிறாய்.பழந்தரும் மரத்தின் கிளைகளிலேபகலில் முழுக்க உறங்குகிறாய்.பார்ப்பதற்கு எலி முகமாய்ஏனோ தோற்றம் தருகின்றாய்முதுகில் எலும்பு இருக்கிறதே முயற்சிகள் உண்டா உன்னிடத்தில்?முயன்று முழுதாய்ச் செய்தாலேதோல்விகள் வருமா கிட்டத்தில்?- இ.எஸ்.லலிதாமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !