உள்ளூர் செய்திகள்

ஃபெரட் இல்லாம வாழவே முடியாது!

உலகில் பல்வேறு வினோத செல்லப் பிராணிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். இவற்றில் பலவற்றை, நாம் பார்க்கவோ அறிந்திருக்கவோ மாட்டோம். புருஷோத்தமன் அப்படி ஒரு செல்லப்பிராணியை வளர்த்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசியபோது... பெட் கடையில் பகுதிநேர வேலையா, ஆச்சரியமா இருக்கே? எனக்குச் சின்ன வயசிலிருந்து செல்லப்பிராணிகள் வளர்க்கணும்னு ஆசை. ஆனா, எங்க வீட்டுல அதற்கான இடம் இல்ல. இந்தக் கடை வந்தபோது, தினமும் வேடிக்கை பார்த்துட்டுப் போவேன். ஒரு நாளைக்கு என்னதான் இருக்குன்னு பார்க்க வந்தேன். எனக்குத் தெரியாத பல புதிய விலங்குகள், பறவைகள் இருந்தன. எப்படியாச்சும் ஏதாச்சும் ஒண்ணையாவது வாங்கிடனும்னு முடிவெடுத்தேன்.சூப்பர், என்ன வாங்கினீங்க? ஃபெரட் (Ferret)! கேள்விப்பட்டு இருக்கீங்களா?இல்லையே! ஃபெரட் பத்தி சொல்லுங்களேன்!கீரிப்பிள்ளை மாதிரி முகம்; நாய், பூனை மாதிரியான குணங்கள் இருக்கிற ஓர் விலங்கு. இப்படியொரு அதிசய செல்லப் பிராணிதான் ஃபெரட். வீட்டுக்காரங்க வந்ததும் நாய்கள் எப்படி அவங்களைக் கொஞ்சி விளையாடுமோ, அதேமாதிரி கொஞ்சி விளையாடும்.ஃபெரட் வளர்க்கிறதுக்கு என்ன காரணம்?நாய்கள் இருந்தா, அதை வாக்கிங் கூட்டிட்டு போகணும். அக்கம்பக்கத்துல அதால பிரச்னை ஏதும் வராம இருக்கணும். பூனைகளுக்குப் பராமரிப்புச் செலவு அதிகம். இதனாலதான் நான் எதுவுமே வாங்காம இருந்தேன். கடையில இருந்த பல விலங்குகளில், ஃபெரட்தான் துருதுருன்னு விளையாடிட்டு இருந்தான். இதைப்பத்தி கடையில கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சுப்போனதால், வாங்க முடிவெடுத்தேன்.முடிவெடுத்தீங்களா? அப்ப வாங்கலையா?(சிரிப்புடன்) என்னோட பட்ஜெட்டை மீறிடுச்சு ஃபெரட்டோட விலை. அதான் அதேகடையில் பகுதிநேரம் வேலை பார்த்து, பணம் சேர்த்து வாங்கினேன்.உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?'டேய்! கீரிப்பிள்ளையை போய் வீட்டுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லி முதல் எதிர்ப்புக்கொடி காட்டினாங்க. இதோட பெயரைச் சொன்னா அம்மாவுக்குப் புரியல. நான் ஏதோ ஏமாந்துட்டேன்னு சொல்வாங்க. ஃபெரட், தன்னோட சேட்டையால, அப்பாவி முகத்தால அம்மாவோட மனசுல இடம் பிடிச்சுட்டான்.எந்த மாதிரியான சாப்பாடு பிடிக்கும்?பொதுவாக, பழங்கள் போதும். குறிப்பா பப்பாளிப் பழத்தை விரும்பிச் சாப்பிடும். எங்க வீட்டுல சமைக்கிற சிக்கனைக்கூட சாப்பிடக் கொடுப்போம். --செல்லப் பிராணிகள் மனச்சோர்வை நீக்குமா? நிச்சயமாக. நான் வீட்டுக்கு வந்ததும், ஃபெரட்டோட விளையாடப் போயிடுவேன். நேரம் எப்படிப் போகுதுன்னு தெரியாது. என்னோட நட்பு வட்டம் சின்னது. இவன் தான் என்னோட பெரிய சந்தோஷம். நிச்சயமா, என்னால ஃபோன் இல்லாம இருக்க முடியும். ஃபெரட் இல்லாம இருக்க முடியாது.இவங்களுக்காக வீட்டுல ஏதாச்சும் இடம் இருக்கா?ஆளுங்க இருக்கறதால, ஜாலியா வீட்டுக்குள்ள சுத்தி திரிவாங்க. இரவு நேரத்துல பாதுகாப்பா இருக்கறதுக்காக கூண்டில் தூங்க வைப்போம். இவங்களுக்கு ஃபேன் காற்று எப்போதும் வேணும். இப்போ ரெண்டு ஃபெரட்டை வளர்த்து வருகிறேன். இதையும் கடையில் வேலை செஞ்சுதான் வாங்கினேன். ஃபெரட்டுன்னு சொன்னாலும் கீரிப்பிள்ளைன்னுதான் அக்கம்பக்கத்துல சொல்றாங்க என்றபடி ஃபெரட்டை அணைத்துச் சிரிக்கிறார் புருஷோத்தமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !