6வது முறையாக சாம்பியன்
பிப். 1 - மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். அவர் 6ஆவது முறையாக ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவுடன் மோதிய ஜோகோவிச் வென்று, 6ஆவது முறையாக பட்டத்தை தட்டினார். அவர் 2008, 2011, 2012, 2013, 2015 களுக்குப் பிறகு இப்போதும் கோப்பையை வென்றுள்ளார். ஆஸி. நட்சத்திரம் 'ராய் எமர்சன்' 1961-67ல், 6 முறை பட்டம் வென்ற சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். இது ஜோகோவிச் பெறும் 11ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம்.