உள்ளூர் செய்திகள்

தமிழ் எழுத்துக்களில் வந்த மாற்றம்

தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களில் முக்கியமான மாற்றங்களை, சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் வீரமாமுனிவர், மற்றொருவர் ஈ.வெ.ராமசாமி.அதுவரை 'ஒ' குறிலைக் குறிக்க அதன் மீது ஒரு புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. புள்ளி வைக்காமல் எழுதப்பட்ட 'ஒ' நெடிலாகக் கருதப்பட்டது.இதேபோல் 'எ' குறிலை எழுத குறில் 'எ' மீது புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. இம்மாதிரி குறில் உயிரெழுத்துக்களை மாற்றி எழுதும் வழக்கம் வீரமாமுனிவரால் கொண்டுவரப்பட்டது.இப்படியே 'ஒ', 'ஓ', 'கொ', 'கோ' என தற்போதைய வடிவங்களை அவர்தான் கொண்டு வந்தார். அதற்கு முன் பயன்படுத்திய வவடிவம் படத்தில் காண்க.ஈவெ.ரா., தமிழ் எழுத்துக்களில் சில மாற்றம் வேண்டும் என்று கூறியதை அடுத்து, 1979ல் தமிழக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது.அதற்கு முன், எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் சிரமங்கள் இருந்தன. சில குறிப்பிட்ட எழுத்துக்களுக்காக புதிய அச்சுகள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் ஈவெரா மாற்றங்கள் வேண்டும் என்றார். அவர் பரிந்துரை செய்த எழுத்துச் சீர்திருத்தங்களில், சிலவற்றை மட்டும் தமிழக அரசு ஏற்று, நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதைத்தான் நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !