உள்ளூர் செய்திகள்

சார்லஸ் டிக்கன்ஸ்

7.2.1812 - 9.6.1870 | போர்ட்ஸ்மௌத், இங்கிலாந்துபடிப்பில் சிறந்தவராக இருந்தாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக, சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். 4 வயதில் இருந்தே புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டதால் புத்தகம் வைத்திருப்பவர் யாரைப் பார்த்தாலும், அந்தப் புத்தகத்தை எப்படியாவது அவரிடம் இருந்து வாங்கிப் படித்துவிடுவார். பணியில் இருந்தபோது சந்தித்த இன்னல்கள், மனிதர்கள் குறித்து தினமும் குறிப்பு எழுதிக்கொள்வார். இப்படி, கையில் எது கிடைத்தாலும் படிக்க ஆர்வமாக இருந்த சார்லஸ் டிக்கன்ஸ், ஒரு வாரப் பத்திரிகையில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்தார்.சிறுவயதிலேயே கதைகள் எழுதும் ஆர்வம் அதிகமிருந்ததால், தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் உதவியோடு சுவாரசியமாக எழுதத் தொடங்கினார். பல அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட இவரின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள் என அனைத்தும் உலக அளவில் பிரபலமடைந்தன. ஓர் இதழில் முதன் முதலில் இவர் எழுதிய தொடர் 'தி பிக்விக் பேப்பர்ஸ்'. இதைத் தொடர் கட்டுரையாக எழுதினார். அடுத்த தொடர் எப்போது வரும் என்று இலக்கிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிகழ்வெல்லாம் டிக்கன்ஸ் எழுத்தால் நிகழ்ந்தது! அந்த அளவுக்கு எழுத்தில் சுவை கூட்டி, படிக்கத் தெரியாதவர்களையும் கதை கேட்கவைத்து உலகம் முழுவதும் பிரபலமானார். எதைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார். அதற்காக ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யவும் அவர் தயங்கியதில்லை. தலையில் படியாமல் இருக்கும் ஒரு முடிக்காக தலையைச் சீவிக்கொண்டே இருப்பாராம். அதுபோல புத்தகங்கள் அடுக்குவது, எழுதும் மையின் நிறம் ஒரே மாதிரி இருப்பது என அனைத்திலும் நேர்த்தியாக இருப்பார் டிக்கன்ஸ். இதை எழுத்திலும் கையாண்டு வாசகர்களை தன்பக்கம் இழுத்திருக்கிறார் இந்த 'இலக்கிய ஜாம்பவான்'.எழுதிச் சம்பாதித்த பணத்தை, குழந்தைத் தொழிலாளர்களுக்காகவும், பெண்களின் நலனுக்காகவும் செலவிட்ட டிக்கன்ஸ் எழுத்துலக நாயகனாக காலம் கடந்து நிற்கிறார்.மிக முக்கியமான படைப்புகள்Oliver Twist A Tale of Two Cities A Christmas CarolGreat ExpectationsBarnaby Rudge


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !