செய்னா சாம்பியன்
சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் செய்னா, சீனாவின் சன் யூவைச் சந்தித்தார். இதில் ஆதிக்கம் செலுத்திய செய்னா 11-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார். இதன்மூலம், 2014க்குப் பின் இந்தத் தொடரில் 2ஆவது முறையாகப் பட்டம் வென்றார்.