சிப்ஸ் சர்ச்சை!
பெப்சி நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் (Lays) தயாரிப்புக்குப் பயன்படும் உருளைக்கிழங்கு ரகம் FC5. இந்திய விவசாயிகள் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு இதனை விளைவிக்கின்றனர். இந்நிலையில், சில குஜராத் விவசாயிகள் FC5 உருளையை அனுமதியின்றி பயிரிட்டதாக பெப்சி குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்தது. உருளையை மலிவு விலையில் தர வேண்டும் (அ) 1.5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க கோரியது பெப்சி. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழ, வழக்கை வாபஸ் வாங்கியுள்ளது பெப்சி.