உள்ளூர் செய்திகள்

சிட்டிஸெண்டியம் கலைக்களஞ்சியம்

'கலைக்களஞ்சியம்' (என்சைக்ளோப்பீடியா/Encyclopedia) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். வீட்டிலேயே வைத்தும் இருப்பீர்கள். இணையத்திலும் கலைக்களஞ்சியங்கள் நிறைய உள்ளன. அவற்றில் 'விக்கிபீடியா' (Wikipedia) நம்மால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா போலவே நம்பகமான 'சிட்டிஸெண்டியம்' (Citizendium) என்ற கலைக்களஞ்சியமும் உள்ளது. விக்கிபீடியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து, அவற்றை வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு செய்து, சரிபார்த்து தொகுத்து வெளியிடுவதே இதன் நோக்கம். விக்கிபீடியாவின் உருவாக்கத்தில் இணைந்து பணி செய்த 'லாரி சேஞ்சர்' (Larry Sanger) 'சிட்டிஸெண்டியம்' கலைக்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளார். அந்த இணைய தளத்தை நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்கள்!இணைப்பு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !