உள்ளூர் செய்திகள்

கலர் கலரா பயம்!

நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய பயம் இருக்கிறது. இப்படி பயப்படுவது Phobia - 'ஃபோபியா' எனப்படும். உலகில் 90 சதவிகிதம் மக்களுக்கு ஏதாவது ஒரு 'ஃபோபியா' இருக்கிறது. இதில் பல வேடிக்கையான 'ஃபோபியா'க்களும் உண்டு. சிலருக்கு வண்ணங்களைக் கண்டால் கூட பயம் ஏற்படுமாம். ஒவ்வொரு நிறத்தையும் பார்க்கப் பயப்படுவதற்குத் தனித்தனிப் பெயர் உண்டு. எந்த வண்ணத்தைப்பார்த்தாலும் பயப்படுவது க்ரோமட்டோ ஃபோபியா (Chromato Phobia).சிவப்பு: எரித்ரோ ஃபோபியா (Erythro Phobia)வெள்ளை: லியூக்கோ ஃபோபியா (Leuko Phobia)கருப்பு: மெலனோ ஃபோபியா (Melano Phobia)ஊதா: பார்பைரோ ஃபோபியா (Porphyro Phobia)மஞ்சள்: ஸந்தோ ஃபோபியா (Xantho Phobia)ஆரஞ்சு: கிரைசோ ஃபோபியா (Chryso Phobia)பச்சை: குளோரோ ஃபோபியா (Chloro Phobia)நீலம்: சியானோ ஃபோபியா (Cyano Phobia)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !