உள்ளூர் செய்திகள்

குக்...குக்...குக்குறுவான்!

தமிழ்ப் பெயர்: குக்குறுவான்ஆங்கிலப் பெயர்: காப்பர்ஸ்மித் (Coppersmith)உயிரியல் பெயர்: மேகலைமா ஹேமாசிபலா (Megalaima haemacephala) அளவு: 17 செ.மீ.காணப்படும் இடங்கள்: இந்தியத் துணைக்கண்டம்வலசை/ வசிப்பிடம்: காஷ்மீர், இராஜஸ்தானைத் தவிர ஏனைய பகுதிகளில் காணமுடியும்.வாழிடம்: புல்வெளிக் காடுகள்குக்குறுவான், ஊர்க் குருவிகளைவிட அளவில் பெரியதாக இருக்கும். உடல் தடித்தும், குட்டையான வாலுடன் காணப்படும். அலகு குருவியைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும். உடலின் மேற்பகுதி இலைப் பச்சையாகவும், நெற்றி, மார்பு, கால்கள் ஆகிய பகுதிகள் அடர்த்தியான இரத்தச் சிவப்பாகவும் இருக்கும். முகம் கறுத்த கண்பட்டை கொண்ட மஞ்சளாகவும் காணப்படும். அலகை உன்னிப்பாகக் கவனித்தால், அதன் தொடக்கத்தில் மீசை முடிகள் காணப்படும். இந்தப் பறவை பளிச்சென்ற நிறத்தில் காணப்பட்டாலும், மரங்களிலுள்ள இலை நிழலில் மறைந்து கொள்வதால், எளிதில் காண முடியாது. குக்குறுவானை அதனுடைய ஒலியை (குக்...குக்...குக்...) வைத்து இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம். இதன் குரலை வைத்துத்தான் குக்குறுவான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.மரங்கொத்திகளைப்போல மரப்பொந்துகளில் முட்டையிட்டு வாழும். மரங்கொத்திகளைப் போல மரத்தைத் தொற்றித் தட்டி, மரப் புழுக்களை உண்ணாது. மரங்களில் உள்ள பழங்களை உண்ணும். ஆல், அத்தி ஆகிய மரங்களில் குக்குறுவானை நிச்சயம் காண வாய்ப்புண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !