கூர்க்கா படைப்பிரிவு
நாடு சுதந்திரம் அடையும்போது, 10 கூர்க்கா படைப் பிரிவுகள் இருந்தன. கூர்க்கா என்பது நேபாள நாட்டில் வசிக்கும் ஓர் இனத்தைக் குறிக்கிறது. இயற்கையாகவே போர் செய்யும் திறன், உயர்ந்த மலைப் பகுதிகளில் செயலாற்றும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.இந்தியா, பிரிட்டன், நேபாளம் இடையே ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, 6 படைப்பிரிவுகள் இந்திய ராணுவத்திற்கு மாற்றப்பட்டன. இதில் 3ஆவது கூர்க்கா படைப்பிரிவு 200 ஆண்டுகள் பழமையானது. தற்போது நமது ராணுவத்தில் 7 கூர்க்கா படைப்பிரிவுகளும், 39 படையணிகளும் உள்ளன.சுதந்திரத்திற்குப் பின்னர், 177 விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படைப் பிரிவினர், அசோகா, கீர்த்தி சக்ரா உள்பட 200-க்கும் மேற்பட்ட வீர விருதுகளைக் குவித்துள்ளனர்.