அசத்தல் ஏ.டி.எம். அறிமுகம்
ஹரியானா மாநிலம் குர்கானில், இண்டஸ் இண்ட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில், 'டெபிட் கார்டு' மட்டுமின்றி, 'காசோலை (Cheque) மூலமாகவும் பணம் பெறும் வசதி அறிமுகமாகி உள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில், காசோலையைச் செருகியதும், அது, அப்படியே 'ஸ்கேன்' செய்யப்பட்டு, வங்கி அலுவலரின் பார்வைக்குச் செல்லும். அவர், அதில் உள்ள கையெழுத்தை உறுதிசெய்து, அனுமதி அளித்த அடுத்த நொடியில், ஏ.டி.எம். இயந்திரம் பணம் அளிக்கும். இதன் மூலம், 'வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துள்ளது.