உள்ளூர் செய்திகள்

வழிப்பறி செய்யும் பறவைகள்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவுக்கு பெரும் பிரச்னையாகி இருக்கிறது சீகல்ஸ் கடற்பறவைகளின் வழிப்பறி! பிரிட்டனில் அருகி வரும் பறவைகளின் பட்டியலில் சீகல்ஸ் இருப்பதால், அவற்றைக் கொல்லக்கூடாது என்ற சட்டமிருக்கிறது. மனிதர்களால் தங்களுக்கு பிரச்னை இல்லை என்பதை உணர்ந்த இப்பறவைகள், கடற்கரைப்பகுதிக்கு கையில் உணவுடன் வரும் எவரையும் விட்டுவைப்பதில்லை. வேடிக்கை பார்த்தபடி கையில் திண்பண்டத்துடன் வருபவர்களைத் தேடிவந்து, அவர்கள் கையிலிருப்பதைப் பறித்துச்செல்கின்றன. அப்போது அவை ஏற்படுத்தும் காயங்கள், தையல் போடும் அளவிற்கு போய்விடுகின்றன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் பிரைட்டன் (Brighton) கடலோரப்பகுதியில் இவற்றின் தொல்லை மிகுதியாக இருப்பதாக, அரசுக்கு புகார்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இவற்றை விரட்டுவதற்கு ஏற்கெனவே அங்கு தண்ணீர் துப்பாகிகள் (பசங்க விளையாடும் அதே துப்பாக்கிதான்) பயன்பாட்டில் உள்ளது. இப்போது பிரச்னை நாடாளுமன்றம் வரைக்கும் போய் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !