தேதி சொல்லும் சேதி!
ஜனவரி 23, 1897 - சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி (தலைவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டு ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த அணிதிரட்டினார்.ஜனவரி 25, 2011 - தேசிய வாக்காளர் நாள்18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம் வாக்களிக்கும் உணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 2011 முதல் இந்த நாள் இந்திய அரசாங்கத்தால் அனுசரிக்கப்படுகிறது.ஜனவரி 26, 1950 - இந்திய குடியரசு நாள்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய அரசியல் சட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்ட நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.ஜனவரி 26, 1953 - உலக சுங்கத்துறை நாள்சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, முதல் நிர்வாகக் கூட்டம் பெல்ஜியம், ப்ரசெல்ஸில் நடைபெற்றது. 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. தற்போது இதில் 179 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பு உலகின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது.ஜனவரி 28, 1865 - லாலா லஜபதி ராய் பிறந்த நாள்இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். 'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பட்டார். எழுத்தாளராகவும் அரசியல் தலைவராகவும் இருந்தார். பஞ்சாப் தேசிய வங்கி, லட்சுமி காப்புறுதி கம்பெனி ஆகியவற்றை நிறுவினார்.ஜனவரி 29, 1970 - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்த நாள்இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர். ஏதென்ஸில், 2004ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004ம் ஆண்டின் ஒரே பதக்கமும் இதுதான். இந்தியத் தரைப்படையில் பணியாற்றி 2013ல் ஓய்வு பெற்றார்.