ஆளில்லா விமானத்தில் டெலிவரி
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம், ஆளில்லாத டிரோன் விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த விமானங்கள், 15 கி.மீ. தூரம் வரை பறந்து பொருட்களை டெலிவரி செய்யும் என்று அமேசான் நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸ் கூறியுள்ளார்.