பூமியை சுற்றும் சிறு விண்கோள் கண்டுபிடிப்பு!
பூமியைச் சுற்றும் சிறு கோள் (Asteroid) ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு '2016 HO3' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிறுகோள் 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி நீள் வட்டப் பாதையில் வலம் வருவதைப்போல் உள்ள இந்தச் சிறு கோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தக் கோளை பூமியும் சூரியனும் மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் மாறி மாறித் தாண்டும் இயக்கத்தில் இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக (Jet Propulsion Laboratory) விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.