கோப்பை வென்றார் ஜோகோவிச்
கனடாவின் டொரன்டோ நகரில், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் உலகின் 'நம்பர் - 1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார்.* பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் மடிசன் கீசை வீழ்த்தி, பட்டம் வென்றார்.