உள்ளூர் செய்திகள்

நீங்களே உருவாக்கும் சட்டம்! (புகைப்படச் சட்டம்!)

வீட்டு வரவேற்பறையில் புகைப்படங்கள் வைக்க, நிறைய செலவழித்துதான் ஃபோட்டோ ஃபிரேம்கள் வாங்க வேண்டும் என்றில்லை. குப்பைக்குப் போக வேண்டிய ஐஸ்கிரீம் குச்சிகளைச் வைத்துக்கூட எளிய ஃபோட்டோ ஃபிரேம்களைச் செய்யலாம். தேவையான பொருட்கள்:1. ஐஸ்கிரீம் குச்சிகள் - 15. உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் குச்சிகளில் தீட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஐஸ்கிரீமே சாப்பிட மாட்டோம் என்பவர்கள், கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும் வண்ணக் குச்சிகளை ரெடிமேடாக வாங்கிக்கொள்ளலாம். 2. கருப்பு நிற சார்ட் துண்டு. 3. அலங்கரிக்க முத்துகள். ஸ்டிக்கர் பொட்டைப்போல ஒட்டுவதற்கு வசதியாக, பசை தடவிய முத்துகள் கிராஃப்ட் கடைகளில் கிடைக்கின்றன.4. கத்தரிக்கோல்.5. பசை.1. முதலில் கருப்பு நிற சார்ட் துண்டில் பசை தடவி , 11 ஐஸ்கிரீம் குச்சிகளை வரிசையாக ஒட்டவும். 2. இரு புறமும் மிச்சம் இருக்கும் கருப்பு சார்ட்டை வெட்டிவிடவும்.3. 9 X 6 செ.மீ. நீள துண்டுத் தாளை, குச்சிகள் ஒட்டிய சட்டத்தின் நடுவில் வைக்கவும்.4. தாளின் இடம் மற்றும் வலப்பக்கங்களை ஒட்டியபடி, இரண்டு குச்சிகளை ஒட்டவும்.5. தாளின் கீழ்ப்பகுதியை ஒட்டியபடி ஒரு குச்சியை ஒட்ட வேண்டும்.6. அடுத்ததாக, பக்கவாட்டுக் குச்சிகளின் மேல்புறத்தில், தாளின் மேல்பகுதி விளிம்பை ஒட்டியபடி ஒரு குச்சியை ஒட்ட வேண்டும். 7. சட்டத்தின் பின்பக்கத்தில் இருக்கும் சார்ட்டில் மாட்டுவதற்கு வசதியாக ரிப்பன் துண்டை ஒட்ட வேண்டும். 8. குச்சிகளில் முத்துகளை ஆங்காங்கே ஒட்டிவிட வேண்டும். அழகான உங்கள் புகைப்படத்தை மாட்டிக்கொள்ள அழகிய சட்டம் தயார்! - ஓவியா டீச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !