பறவை பாலூட்டுமா?
மரகதப் புறாஆங்கிலப் பெயர்: 'எமரால்டு டவ்' (Emerald Dove)உயிரியல் பெயர்: 'சால்கோப்ஹாப்ஸ் இன்டிகா' (Chalcophaps indica) குடும்பம்: 'கோலம்பிடே' (Columbidae)வேறு பெயர்: பச்சைப் புறா காணப்படும் நாடுகள்: இந்தியா, வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தைவான், தாய்லாந்து, வியட்நாம். * வாழிடம் புதர்க்காடுகள், விவசாய நிலங்கள், அலையாத்திக்காடுகள். * நடத்தை (Behaviour)கீழ் நிலையில் பறக்கும். அதிகமாக நடக்கும் அல்லது ஓடும்.* நிறம் நெஞ்சுப் பகுதி பழுப்பு நிறம், இறக்கை மரகதப் பச்சை நிறம், வால்பகுதி கருப்பு நிறம். அலகு, கால்கள் இளஞ்சிவப்பு நிறம்.* உணவுபழம், கொட்டை, தாவரங்கள், கரையான்கள் * கூடுசிறிய குச்சிகளைப் பயன்படுத்தி, மரக்கிளைகளில், உயர்ந்த கட்டடங்களில் கூடு கட்டும்.* எதிரிகள்காட்டுப்பூனை, எலிகளால் வேட்டையாடப்படுகிறது. காடுகள் அழிந்து வருவதால், இதன் வாழிடம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.* இனப்பெருக்க காலம்ஏப்ரல் - செப்டம்பர்புறாக்கள், கண்ணாடியில் தங்களின் பிரதி பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவை.* முட்டையின் எண்ணிக்கை1 - 2* முட்டையின் நிறம்பழுப்பு, வெள்ளை நிறம். * அடைகாத்தல்13 -- 15 நாட்கள் வரை. பெண் பறவை மட்டுமே அடைகாக்கும்.நீளம் 20 - 28 செ.மீ.எடை 90 - 172 கிராம்பாலூட்டும்!புறாவின் தொண்டைப் பகுதி 'கிராப்' (Crop) எனப்படும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்தே, இந்தப் பையின் உட்புறத் திசுக்களில் பால் போன்ற திரவம் சுரக்கிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்று கெட்டியாக இருக்கும் இது 'கிராப் மில்க்' (Crop Milk) எனப்படும். இது புரதம், கொழுப்புச் சத்து நிறைந்தது. இந்தப் பாலை புறாக்குஞ்சுகளுக்கு அலகுகளால் 2 முதல் 3 வாரங்களுக்கு புறாக்கள் ஊட்டி விடுகின்றன. சாதாரண நாட்களில் இந்த தொண்டைப் பை தானியங்களைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது.- கிருபா நந்தினி