இனி தேர்வு பயம் வேண்டாம்
தமிழகத்தில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தத்தையும், பயத்தையும் போக்குவதற்கான ஏற்பாடுகளை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகளைத் தர மனநல ஆலோசகர்களும், மாதிரிக் கேள்வித்தாள்கள், வழிகாட்டல்களை வழங்க கல்வியாளர்களும், பல்துறை வல்லுனர்களும் தயார் நிலையில் உள்ளனர். 7373002426 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், Tamil Nadu Govt Exam Stress Relief என்ற ஃபேஸ்புக் (Facebook) பக்கத்திலும், @TNSchoolEduDept என்ற டிவிட்டர் ஐடியிலும் இந்தச் சேவையை மாணவர்கள் பெறலாம். மேலும் ednstressrelief@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தங்களின் சந்தேகங்களை அனுப்பி பதில்களைப் பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.