நாயைக் கொஞ்சாதீர்கள்!
செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள், அதனைக் கொஞ்சக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “பலரும் நாய் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆன்டிபயாடிக்கை அடிக்கடி வழங்குகின்றனர். இதனால், நோய் நுண்ணுயிரிகள், மருந்துக்குக் கட்டுப்படாதவையாக மாறிவிடுகின்றன. பிராணி வளர்ப்போர், அவற்றுடன் நெருங்கிப் பழகும் போது, நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” என்று புதிய ஆய்வில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.