டுட்டி சந்த் சாதனை
கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரில் கோசனாவ் நினைவு சர்வதேச தடகளப் போட்டி நடந்தது. இதில், பெண்கள் 100 மீ. ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் டுட்டி சந்த் பங்கேற்றார். இந்தத் தூரத்தை 11.32 வினாடியில் எட்டினால், ஒலிம்பிக் வாய்ப்பைப் பெறலாம் என்பதால், சீறிப் பாய்ந்தார். 11.30 வினாடியிலேயே இலக்கை எட்டிய டுட்டி சந்த், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் பி.டி.உஷாவுக்கு (1980) பின் இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை இவர்தான்!