பூமியின் கதை
உலக புவி தினம் ஏப்ரல் 22பூமி தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகின்றன. நவீன மனிதர்களாகிய நாம் தோன்றி 2 லட்சம் வருடங்கள்தான் ஆகிறது. பூமி தோன்றி 6 மணிநேரம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால், மனித குலம் தோன்றி இதுவரை வாழ்ந்த காலத்தின் அளவு ஒரு நொடி என்று சொல்லலாம்!ஒரு வருடத்தைப் பருவங்களாகவும் மாதங்களாகவும் பிரிப்பது போல பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாக அறிஞர்கள் பிரித்து, அவற்றுக்குப் பெயரும் வைத்து இருக்கிறார்கள். இந்தப் பெயர்களை உச்சரித்தால், நாக்கு சுளுக்கிக்கொள்ளும். கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் இருந்து வந்த சொற்கள் அவை!எந்தக் காலத்தில் என்ன வகையான உயிரினங்கள் இருந்தன என்பதைத் தெரிந்துகொள்வோம்...நிலப்பரப்பில் மாற்றம்: இன்றைய உலக வரைபடத்தில் 7 கண்டங்களும், 5 பெருங்கடல்களும் உள்ளன. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மொத்த நிலப் பரப்பும் ஒரே ஒரு கண்டமாகத்தான் இருந்தது. அந்தப் பெரும் கண்டத்துக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் பேன்ஜியா (Pangea).ட்ரையாஸிக் காலம்: சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பேன்ஜியா, கோண்ட்வானா, லௌரேஷியா என்கிற இரு பெரும் நிலத் துண்டுகளாகப் பிரியத் தொடங்கியது. தென் பகுதியான கோண்ட்வானாவில் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகியவை இணைந்து இருந்தன. வட பகுதியான லௌரேஷியாவில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவை இருந்தன.ஜுராஸிக் காலம்: சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தென் அமெரிக்காவும் ஆப்ரிக்காவும் பிரியத் தொடங்கின. ஆஸ்திரேலியா மேற்கு நோக்கி நகர்ந்தது. இந்தியத் துணைக் கண்டம் ஆசியாவை நோக்கி நகரத் தொடங்கியது.தற்போதைய நிலஅமைப்பு: வட அமெரிக்காவில் இருந்து பிரிந்த ஐரோப்பா , 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு நோக்கி நகர்ந்தது. நமக்குத் தெரிந்த கண்டங்களும் சமுத்திரங்களும் அதன் இன்றைய அமைப்பை ஏறத்தாழ எட்டின.உயிரனங்களின் பெயர்கள்:1. ஜெல்லி மீன்2. ட்ரிலோபைட் (Trilobite)3. அகேன்தோடியன் (Acanthodian) தாடைகள் இருந்த ஒரு வகை மீன்.4. கூக்சோனியா (Cooksonia) ஆரம்பகால நிலத் தாவரம்.5. இக்த்யோஸ்டெகா (Ichthyostega) நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஆரம்பகால உயிரினம்.6. டிமெட்ரோடன் (Dimetrodon) ஆரம்பகால பாலூட்டி.7. அன்டியோசரஸ் (Anteosaurus)8. ஹெறேரசரஸ் (Herrerasaurus) ஆரம்பகால டைனோசர்.9. டெரனோடன் (Pteranodon) பறக்கும் ஊர்வன உயிரினம்.10. செஃபலோபாட் (Cephalopod)- கணவாய் மீன் மாதிரியான ஒரு வகை மெல்லுடலி11. பிராக்கியோசரஸ் (Brachiosaurus) டைனோசர்.12. க்ருசஃபோன்ட்டியா (Crusafontia) சிறிய பாலூட்டி.13. மெரிகிப்பஸ் (Merychippus) தொடக்ககால குதிரை இனம்.14. புரோகன்சல் (Proconsul) ஒரு வகை ஏப்.15. ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) நவீன மனிதன்.மிவமு = மில்லியன் வருடங்களுக்கு முன் 1 மில்லியன் = 10 லட்சம்தற்போதும் கண்டங்கள் வருடத்திற்கு 1 செ.மீட்டரில் இருந்து 10 செ.மீ. தூரம்வரை, நகர்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.