உள்ளூர் செய்திகள்

சிக்கனமான ஏசி

மின்னணு தொழிற்சாலையில் இயந்திரங்கள் வெளிவிடும் அபரிமிதமான சூட்டைக் குறைக்க, டில்லியைச் சேர்ந்த ஆண்ட் ஸ்டூடியோ எனும் கட்டுமான நிறுவனம் ஒரு தீர்வு கண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் செய்யப்பட்ட சுடுமண் குழாய்களை வரிசையாகத் தேன் கூடு போல் அடுக்கி, அதன் மீது தொழிற்சாலையிலிருந்து வீணாகும் நீரை சுத்திகரித்து ஊற்றுகின்றனர். வெப்பக் காற்று வெளி வரும் இடத்தில் இந்த அமைப்பை ஏற்படுத்தி இருப்பதால், வெப்பக்காற்று வெளிவரும்போது குளிர்ந்து விடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் சோதனை முயற்சியில் அமைக்கப்பட்ட இந்த குளிரூட்டி முறை, இப்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுமைக்கும் இந்த வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளதாக ஆண்ட் ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சிக்கனமான, இயற்கை குளிர்விப்பான் நாடு முழுவதும் பிரபலமானால், மின்சாரம் மிச்சப்படுவதுடன் பாரம்பரியமாக குயவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !