முட்டையிடும் பாலூட்டி
எகிட்னா (Echidna)ஆங்கிலப் பெயர்கள்: 'ஸ்பைனி அன்ட் ஈட்டர்ஸ்' (Spiny Anteaters)உயிரியல் பெயர்: 'டாகிகிளாஸிடே' (Tachyglossidae) நீளம்: 1.5 அடிஎடை: 2 - 7 கிலோஇனப்பெருக்க காலம்: 27 நாட்கள்ஆயுட்காலம்: 16 ஆண்டுகள்பார்ப்பதற்கு முள்ளம்பன்றி போலவே இருக்கும் 'எகிட்னா' ஓர் அதிசய உயிரினம். பறவைகளைப்போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ஆனால் விலங்குகளைப்போல பால் கொடுக்கும் உடல் தன்மையை உடையது. முட்டையிடும் பாலூட்டி இனம் இது ஒன்று மட்டுமே! உருவத்தில் மிகச் சிறியவை. குட்டையான வாலும் உறுதியான கால்களும் உடையவை. உடல் முழுவதும் முட்கள் போன்ற உறுதியான முடிக்கற்றைகள் இருக்கும். கூர்மையான முட்கள் போன்ற இவை எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. ஆபத்துக்காலத்தில் முடிக்கற்றைகள் சிலிர்த்து முட்கள் பரவியதுபோல தோற்றத்தைத் தரும். கால்களில் உள்ள உறுதியான நகங்களைக் கொண்டு, தரைப்பகுதியில் செங்குத்தான பள்ளம் தோண்டி அதில் வசிக்கிறது. எறும்புகள், கரையான்களை உணவாக உட்கொள்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே இடும். முட்டைகளை தன் அடிவயிற்றில் உள்ள பைக்குள் அடைகாக்கிறது. இந்த வயிற்றுப்பை கங்காருவுக்கு உள்ளதைப் போலவே இருக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், தாயின் வயிற்றுப் பகுதியிலேயே 55 நாட்கள் வரை இருக்கும். தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளில் இவை பால் அருந்துகின்றன. ஆஸ்திரேலியா, தாஸ்மேனியா போன்ற நாடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளே இவற்றின் வாழ்விடம். - ப.கோபாலகிருஷ்ணன்