ஐ.நா.வின் அடுத்த தலைமைச் செயலாளர் தேர்வு தொடக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. ஐ.நா. சபையின் அடுத்த தலைமைச் செயலாளருக்கான வேட்பாளர்கள் யார் என்பதற்கான பல்வேறு உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. ஐ.நா. இணைய தளம் இதைப் பற்றிய தகவல்களை வெளியிடும். ஐ.நா.வின் புதிய தலைமைச் செயலாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்பார்.