உள்ளூர் செய்திகள்

வேளாண்மைச் செம்மல் விருது

பிப். 4 - மதுரை குலமங்கலத்தை சேர்ந்த விவசாயி வி.கிருஷ்ணன். மதுரை வேளாண் கல்லுாரி சார்பில், 'வேளாண் அறிவியல் நிலையம்' நடத்திய, திருந்திய நெல் சாகுபடி பயிற்சியில், கிருஷ்ணன் கலந்துகொண்டார். பின், தனது வயலில் இயந்திர நடவு முறையில் திருந்திய நெல் சாகுபடி செய்தார். இதனால், குறைவான செலவில் இரட்டிப்பு விளைச்சல் எடுத்தார். இவரது சாதனையைப் பாராட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகம் 'வேளாண்மைச் செம்மல்' விருதுடன் ரூ.10 ஆயிரம் வழங்கி கௌரவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !