உள்ளூர் செய்திகள்

இனி தினமும் உடற்பயிற்சிதான்!

ஆங்கிலப் புத்தாண்டு வந்தாலே பலரும் புதிய சபதம் ஒன்றை எடுப்பதும், அதனைப் பின்பற்றுவதும் உண்டு. ஓர் ஆண்டுக்கான இலக்கை முன்கூட்டியே திட்டமிடுவதும் நல்லதே! நம் மாணவ வாசகர்களிடம், 'உங்கள் புத்தாண்டு சபதம் என்ன?' என கேட்டிருந்தோம். சோழிங்கநல்லூர், ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களது கருத்துகள் இதோ: கோவர்த்தனா, 10ஆம் வகுப்புஉணவை வீணாக்கக்கூடாது என்பதுதான், இந்த ஆண்டு எனது புத்தாண்டு சபதம். வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற உணவு பிடிக்கவில்லை எனில், அதைக் கொட்டிவிட்டு வேறு உணவு வாங்கிச் சாப்பிடுவேன். ஒருவேளை உணவுகூட இல்லாமல் நம் நாட்டில் பலர் இருப்பதை சமீபத்தில் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால இனி உணவை வீணாக்கமாட்டேன்.ஸ்ரீநிதி, 10ஆம் வகுப்புசெல்போன் பயன்பாட்டைக் குறைப்பதுதான், இந்த ஆண்டு என் லட்சியம். அதிக நேரம் வீடியோ பார்க்க, கேம்ஸ் விளையாடன்னு எப்பவும் செல்போனும் கையுமா இருக்கிறேன். இதனால், குடும்பத்துல நான் தனியாளாக மாறிப் போயிட்டேன். இனி அவசியத்துக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவேன். குடும்பத்தோடு அதிக நேரத்தைச் செலவழிப்பேன்.அபிராமி, 10ஆம் வகுப்புஇதுவரை ஏதாவது பொருட்கள் வேண்டுமானால் பெரிய வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களுக்குத்தான் செல்வோம். ஆனால், இனி அங்கு போகப் போவதில்லை. வரும் ஆண்டு முதல் சிறு, குறு வணிகர்களை ஆதரிப்போம். அவர்களிடம் மட்டுமே பொருட்கள் வாங்குவது என்று முடிவெடுத்துள்ளேன். முகமது ஆதில், 9ஆம் வகுப்புஉடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதுதான் புத்தாண்டு சபதம். இன்னிக்கு நாட்டுல சர்க்கரைநோய் தான் பெரிய அச்சுறுத்தல். வயசு வித்தியாசமின்றி எல்லோருக்கும் வருது. உடலை ஆரோக்கியமாகப் பேண சிறந்த வழி, உடற்பயிற்சிதான். அதனால இப்பவே உடற்பயிற்சி செய்யத் தொடங்கிட்டேன்.விக்னேஷ், 11ஆம் வகுப்புஎனது புத்தாண்டு சபதம், கோபம், பொறாமை வெறுப்பு, பேராசை போன்ற குணங்களை விட்டு ஒழிப்பது. பொதுவாக இந்தக் குணங்கள் எல்லாம் விஷம் மாதிரின்னு சொல்லிக் கொடுத்தாங்க. யோசிச்சுப் பார்த்தா, அது உண்மைதான்னு தெரிஞ்சது. அதனால இந்த விஷத்தை நானும் அருந்த மாட்டேன். அடுத்தவரிடமும் செலுத்தமாட்டேன் என்று உறுதி எடுத்துள்ளேன். யோக ருத்திரன், 10ஆம் வகுப்புநண்பர்களுடன் சைக்கிளில் சுற்றிவருவதும், விளையாடுவதும் அதிகமாகிவிட்டது. அதனால் படிப்பில் மதிப்பெண்கள் குறைஞ்சிடுச்சு. வரும் ஆண்டில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு அதிகநேரம் செலவழிப்பேன். ஊர் சுற்றுவதையும் விளையாடுவதையும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் எனது புத்தாண்டு சபதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !