உள்ளூர் செய்திகள்

பிடித்த பாடம்!

குறிப்பிட்ட பாடங்களை நீக்கினால் நன்றாக இருக்கும் என்பது, எல்லா காலத்திலும் பல மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகவே இருக்கும். நீங்கள் படிக்கும் பாடங்களில் இருந்து எதை நீக்கலாம்? எதை சேர்க்கலாம்? உங்கள் விருப்பம் என்ன? எனக் கேட்டிருந்தோம். மாணவர்களில் கருத்தறிய, திருவள்ளூர் ஜேக்கப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களை சந்தித்தோம்.கீ.ச.கிஷோர்:பழங்காலக்கதைகள் பேசும் வரலாறு பாடத்தைக் தூக்கிடலாம். பயங்கரமான போர். அதுக்குப் பதிலாக இன்னைக்கு டிரெண்டிங்கில் உள்ள ரோபோட்டிக்ஸ் பற்றிய பாடத்தை அவசியமாகச் சேர்க்கலாம். பி. ஜனனி :கணக்கை நீக்கலாம். கணக்கு புத்தகத்தைத் திறந்தாலே அதுல இருக்கும் எண்கள் எல்லாமே ஓடுறது மாதிரியே தெரியுது. மாற்றாக ஏரோநாட்டிகல் இஞ்ஜினியரிங் பாடத்தைச் சேர்க்கலாம்.ச. விஜய்கிருஷ்ணா:எல்லா பாடங்களும் தேவைதான் என்றாலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, அதுக்கு பதிலாக வானியல் (Astronomy) பாடத்தைச் சேர்க்கலாம். விக்ரம் லேண்டர் காணாமல் போய் கண்டுபிடிக்க எவ்வளவு சிரமப்பட்டோம்? எல்லோரும் படிச்சா, இதுமாதிரி பிரச்னைகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும். மு. நிகில்:தமிழ்ப் பாடத்தை தூக்கிடலாம். எப்படி இருந்தாலும் தமிழை நாம கற்றுக்கொள்ளத்தான் போறோம். அந்த இடத்துல கம்யூட்டர் சயின்ஸை பாடத்தைச் சேர்க்கலாம். எல்லா இடங்களிலும் கம்யூட்டர் பயன்பாடும் அதிகமாக இருக்கிறதால இது பயனுள்ளதாக இருக்கும்.க.சி. தளிக்கொடி:அறிவியலில் உள்ள உயிரியலை நீக்கலாம். அதில் வரும் பெயர் எல்லாம் படிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு. இன்னிக்கு விஷுவல் உலகமாகிடுச்சு. அதனால விஷுவல் கம்யூனிகேஷன் சம்பந்தமான பாடங்களைச் சேர்க்கலாம்.சி. பிரஷாந்தி :வரலாறு பாடத்திற்கு பொதுவாகவே வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கு. அதுக்கு பதிலாக கம்யூட்டர் சயின்ஸை சேர்க்கலாம். இதைச் சின்ன வயசுல இருந்தே கொண்டுவந்துட்டா, அந்தத் துறையில போக விரும்புகிறவங்களுக்கு உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !