இந்தியாவுக்கு ஐந்தாம் இடம்
புதிய கண்டுபிடிப்பு மையங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, சிலிக்கான் வேலி பகுதி பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நகரமாக பிரிட்டன் தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஆகியவை உள்ளன. சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கண்டுபிடிப்பு மையங்கள் உள்ள நகரங்களில் பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது.