வியாழன் கிரகத்தின் முதல் படம்: ஜூனோ சாதனை!
வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011 ல் ஜுனோ (Juno) விண்கலத்தைச் செலுத்தியது. இது தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு 2016 ஜூலை 4- அன்று வியாழனை அடைந்தது. தற்போது, வியாழன் கிரகத்தின் மூன்று நிலவுகளை முதன்முறையாகப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. ஜூனோவுடன் இணைக்கப்பட்டுள்ள உயர்திறன் கேமரா மூலம் 43 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி வியாழனை ஜுனோ படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்தப் படத்தில் வியாழன் கிரகத்தைத் சுற்றி வரும் லோ, யூரோப்பா, கனிமேட் ஆகிய மூன்று நிலவுகளும் தெரிகின்றன.