நாடாளுமன்றத்தில் நரி!
இலண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நரி ஒன்று நுழைந்தது. பொதுவாகவே அரசு கட்டடங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். நரி, நுழைந்த நாடாளுமன்ற அலுவலகம் அக்கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ளது. கீழேயிருந்து சாவகாசமாக அது எப்படி 4வது மாடி வரை வந்தது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தகவலறிந்த காவலர்கள் நரியைப் பிடித்து, வெளியில் கொண்டுபோய் விட்டனர்.