பனி தாங்கும் பனை
ஊசிப் பனைஆங்கிலப் பெயர்: 'நீடில் பாம்' (Needle Palm)தாவரவியல் பெயர்: 'ராபிடோபைலம் ஹிஸ்ட்ரிக்ஸ்' (Rhapidophyllum Hystrix)* 'அர்காசியே' (Arecaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. * 'ராபிடோபைலம்' (Rhapidophyllum) இனத்தில் உள்ள ஒரே பனை.* பனை வகைகளில் மைனஸ் 20 டிகிரி வரை குளிரைத் தாங்கக்கூடியது. * 3 மீட்டர் உயரம் வரை வளரும். சிறிய புதர் போன்று காணப்படும். * தண்டுப் பகுதியில் முட்களை உடையது. * இலைகள் விசிறி வடிவில் இருக்கும். * நெருக்கமாக அமைந்த தண்டுகள் ஊடுருவ முடியாத புதர்க்காடுகள் போல காட்சி தரும்.* சூரிய ஒளிக்காக நிலத்தை நோக்கித் தாழ்ந்தபடி இதன் இலைகள் அமைந்திருக்கும். * ஈரப்பதமுள்ள நிலத்திலேயே இது நன்கு வளரும். * உலகம் முழுவதும் காணப்படும்.- கி.சாந்தா