உள்ளூர் செய்திகள்

ரத்த அழுத்தம் குறைக்கும் மரபணு மாற்ற தக்காளி!

உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முளைக் கீரையின் விதை, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மரபணுக் கூற்றிலிருந்து தேவையான புரதத்தைப் பிரித்தெடுத்த மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை தக்காளிக்குள் செலுத்தினர். பின்னர், மரபணு மாற்றப்பட்ட தக்காளியை எலிக்கு வழங்கிச் சோதனை செய்தனர். ஆய்வின் முடிவில், தக்காளியின் தன்மையும், கேப்டாப்ரிலின் (Captopril) என்ற உயர்ரத்த அழுத்த மருந்தின் தன்மையும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மனிதர்களிடம் மரபணு மாற்றப்பட்ட தக்காளியைக் கொடுத்துப் பரிசோதிக்க விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !