உள்ளூர் செய்திகள்

பயணம் போகும் பறவை

ஆலாஆங்கிலப் பெயர்: 'காமன் டெர்ன்' (Common Tern)உயிரியல் பெயர்: 'ஸ்டெர்னா ஹிருண்டோ' (Sterna Hirundo)ஆலா ஒரு நீர்ப்பறவை. 'ஸ்டெர்னிடே' (Sternidae) குடும்பத்தைச் சேர்ந்தது. தலை, வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும், இறக்கை சாம்பல் நிறத்திலும் இருக்கும். கடற்கரைப் பகுதிகளில் வாழும். இறக்கைகள் நீண்டு, அகலம் குறைவாக வளைந்து காணப்படும். சில வகைப் பறவைகளுக்குக் கால்கள் சிவப்பு நிறத்திலும், அலகுகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். கால்கள் குட்டையானவை. உடலைவிட நீளமான இறக்கைகள் கொண்டவை. இறக்கைகள் நீளமாகவும், பின்புறம் வளைந்தும் இருக்கும். தரையில் உட்கார்ந்திருக்கும்போது, வலது இறக்கை நுனி உடலின் இடது பக்கமும், இடது பக்க இறக்கை நுனி உடலின் வலது பக்கமும் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதைக் காணலாம். ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் கூட்டமாகப் பறந்து இரை தேடும். செங்குத்தாக நீரில் விழுந்து மீனைக் கவ்விப் பிடிக்கும். நீர்ப்பரப்பிற்கு அருகில் உள்ள சமவெளிப்பகுதியில் சருகுகள், நார் போன்றவற்றைக் கொண்டு கூடு அமைக்கும். மூன்று முட்டைகள் வரை இடும். ஆண், பெண் பறவை இரண்டும் முட்டைகளை அடைகாக்கும். மூன்று வாரங்களில் முட்டைகள் பொரிந்துவிடும்.இந்தப் பறவையில், பல வகைகள் உண்டு. தோற்றம், வாழிடச் சூழல் போன்றவற்றை வைத்து, பெயரிடப்பட்டு இவை அடையாளம் காணப்படுகின்றன. இவை வலசை செல்லும் பண்புடையவை. உலகிலேயே அதிக தூரம் வலசை செல்லும் பறவை இனங்களில் இவையும் ஒன்று. குளிர்காலத்தில், வட துருவப் பிரதேசத்தில் இருந்து, தென் துருவப் பிரதேசத்திற்கு சுமார் 12,000 மைல்கள் வரை பறந்து இடம்பெயரும்.சில வகைகள்ஆற்று ஆலா (River Tern - ரிவர் டெர்ன்)குளத்து ஆலா (Indian River Tern - இண்டியன் ரிவர் டெர்ன்)சிட்டி ஆலா (Little Tern - லிட்டில் டெர்ன்)மீசை ஆலா (Whiskered Tern - விஸ்கர்டு டெர்ன்)பருத்த அலகு ஆலா (Gull Billed Tern - கல் பில்டு டெர்ன்)சிவப்பு மூக்கு ஆலா (Caspian Tern - கேஸ்பியன் டெர்ன்)பெரிய கொண்டை ஆலா (Large Crested Tern - லார்ஜ் கிரெஸ்ட்டட் டெர்ன்)கறுப்பு வயிறு ஆலா (Black Bellied Tern - பிளாக் பெல்லிடு டெர்ன்)ஆர்க்டிக் ஆலா (Arctic Tern - ஆர்க்டிக் டெர்ன்)நீளம்: 35 செ.மீ.இறக்கை நீளம்: 98 செ.மீ.எடை: 150 கிராம்- கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !