இந்தியரின் நிறுவனத்தை வாங்கிய கூகுள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோரான வருண் மல்ஹோத்ரா 'சினெர்ஜிஸ்' என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை டொரன்டோவில் 2013ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம் கூகுள் பயன்பாடுகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை கூகுள் நிறுவனம் தற்போது வாங்கி இருக்கிறது.