அத்திரி பத்திரி
வெளிநாட்டில் இருந்து பழங்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குதான் குதிரை. ராஜாக்களிடம் குதிரைப் படை இருந்தது. ராஜாக்கள் தங்களுக்கென்று ஒரு தனி குதிரையும் வைத்திருந்தார்கள். சங்கப் பாடல்களில் குதிரைப் பற்றிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. குதிரைக்கு புரவி, பரி, அசுவம் என்று வேறு பெயர் இருப்பதை அறிவோம். ஆனால் அதற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:அச்சுவம், அத்திரி, அயம், அரி, இவுளி, உத்தரி, உன்னி, கண்ணுகம், கந்தருவம், கந்துகம், கர்க்கி, கிள்ளை, குந்தம், குரகதம், குரை, கொக்கு, கொய்யுளை, கோடகம்,கோடரம், சடிலம், சயிந்தவம், துரகதம், துரகம், துரங்கம், தூசி, தேனு, நாணுகம், பத்திரி, பாடலம், பாய்மா, மண்டிலம், மாவயம், வாசி, தேசி.இதன் பிள்ளை - மறி, குட்டி.கடிவாளம் - கலினம், கவியம், கறுள், மூட்டு. குதிரைக்கயிறு - வசை,வடிகயிறு, வற்கம், வாய்வட்டம்குதிரைக் குளம்பு - குருச்சை, குரம்குதிரைநடை - கதி, கவனம், தாவு. இந்த நடை ஐந்து வகைப்படும். மெல்லியநடை - கவுரிதகம்விரைவுநடை - ஆக்கிரந்திதம்இருகால் தூக்கியாடிவருநடை - வல்கிதம்சுற்றியோடுவது - இரேசிதம்முழுவோட்டம் - புலிதம்குதிரைப்பாகர் - பண்ணுவர், பரிமாவடிப் போர், மாவலர், வதுவர், வாதுவர்.இதன்முடி - குசை, கூந்தல், கேசம், சுவல்குதிரைவாய் நுரை - விலாழிகுதிரையின் வண்டி - தேர்