உள்ளூர் செய்திகள்

பாட்டியின் தாலாட்டு

பெருகிவிட்ட தனிக்குடித்தன வாழ்க்கை முறையில், பாட்டி தாத்தாக்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் நிலையைக் காண முடிவதில்லை. இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த 90 வயதைக் கடந்த மூதாட்டி ஒருவர், கைக்குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி, 'கண்ணும் பொட்டி உறங்குக நீயே' எனும் பழைய மலையாளத் திரைப்பட பாடல் ஒன்றைத் தாலாட்டாகப் பாடும் காட்சி, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி உள்ளது. இது பலருக்கும் இனிய மலரும் நினைவுகளைத் தந்துள்ளது. இப்பாடல், 'சிநேகசீமா' எனும் பழைய திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற பாடலாகும். சென்ற வாரம் முகநூலில் இந்தக் காணொளி பதிவிடப்பட்டது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவைக்காண: https://tinyurl.com/ybbumf4u


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !