பச்சை தேவதை!
ஒரு தேவதை இருந்தாள். அவள் பெயர் மின்தா (míntha). அழகு கொஞ்சும் கண்கள் அவளுக்கு. நிலவு போன்ற வட்ட முகம். கொஞ்சும் மொழியில் பேசினாள். எல்லோர் மீதும் அன்பு செலுத்தினாள். அப்படிப்பட்ட ஒரு தேவதையைப் பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கும்தானே! அப்படித்தான் பிடித்தது கிரேக்க பாதாளக் கடவுளான ஹேடஸ் (Hades) என்பவருக்கு. ஆனால் ஹேடஸின் மனைவியான பெர்சிபோனுக்கு (Persephone) மட்டும் மின்தாவைப் பிடிக்கவில்லை. தன் கணவர் அந்த தேவதையை பார்க்காமல், பேசாமல் இருக்க என்ன வழி என்று யோசித்தாள். மின்தாவை ஒரு செடியாக மாறும்படி சபித்துவிட்டாள். ஹேடஸுக்கு விஷயம் தெரிந்தது. தேவதையை மறுபடியும் பெண்ணாக்க முடியாததால் வருந்தினார். பிறகு, செடியாக மாறிய மின்தாவிற்கு நல்ல மணமும், மருத்துவ குணமும் சுவையும் கிடைக்கும்படி செய்தார்.அப்படி, செடியாக மாறிய தேவதையான மின்தாவை உங்களுக்கும் தெரியும்!அன்றாடம் சமையலில் பயன்படும் புதினாதான் (Mint) அந்த தேவதை! மின்தாவிலிருந்துதான் மின்ட் வந்தது.அம்மா இனிமேல் புதினா சட்னியை இட்லி, தோசைக்கு கொடுத்தால் வெறுக்காமல் சாப்பிடுவீர்கள்தானே! புதினா சாதத்தைப் பார்த்தால் முகம் சுளிக்க மாட்டீர்கள்தானே...அந்த தேவதைத் தாவரத்தில், கால்சியம், தாமிரம், மெக்னீசியம் போன்ற கனிமப்பொருட்களும், A, C, B 2 விட்டமின்களும் அடங்கி உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள் பாஸ்...