உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியான இந்தியத் தொழிலாளர்கள்

இந்தியத் தொழிலாளர்களில் 62 சதவீதம் பேர், தங்கள் வேலையில் திருப்தி கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை குறியீடு தொடர்பாக, மைக்கேல் பேஜ் (Michael Page) நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 'இந்தியாவில், 62 சதவீதம் தொழிலாளர்கள், தங்கள் வேலையில் திருப்தியுடன் உள்ளனர். இதுவே, ஆசிய பசிபிக் பகுதியில், 53 சதவீதமாக உள்ளது.மேலும், தேசிய பொருளாதார நிலை சிறப்பாக செயல்படுவதாக, 53 சதவீத இந்தியத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். சம்பளத்தைவிட, தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், வாழ்விற்கும் தொழிலுக்குமான சமநிலையைக் கடைபிடிப்பதற்குமே, இந்தியத் தொழிலாளர்கள் முன்னுரிமை தருகின்றனர்' என்று தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !