வெப்பம் கூடுது!
பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இது 'ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை' என்றும் எச்சரித்துள்ளது. எல் நினோ விளைவு 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவில் இருப்பதால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.