ஹலோ யார் பேசறது..?
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்காலம் : 3.3.1847 - 2.8.1922இடம் : எடின்பர்க், ஸ்காட்லாந்துமனிதனுடைய குரலை, பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக மாற்றி அதை மறுபடி ஒலிக்கச் செய்யும் சாதனமே தொலைபேசி. உலகமே கொண்டாடும் இந்தக் கண்டுபிடிப்பை மைக்கேல் ஃபாரடே 1831ல் நிகழ்த்தினார். 1861ம் ஆண்டுவரை யாரும் இதைப் பயன்படுத்தவில்லை.அதன்பிறகு 1870களில் கிரஹாம் பெல், மனிதனின் குரலை மின்சாரத்தைப் பயன்படுத்திக் கம்பியில் அனுப்ப முடியும் என்பதை உணர்ந்தார்.வீட்டிலேயே படித்து வளர்ந்த பெல், பியானோ இசைப்பதிலும் ஒலி அலைகளை ஆராய்ச்சி செய்வதிலும் அதிக நேரம் செலவிட்டார். பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவு அனுப்பினார். பேசுவதையும் அதே முறையில் அனுப்பலாமே என்ற சிந்தனை பெல் சிந்தனையில் மணி அடித்தது.மின்சாரத்தின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. தந்தியில் பல செய்திகளை ஒரே கம்பியில் அனுப்ப முயற்சி செய்து, 1876ல் அதில் வெற்றியடைந்தார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 1876ல் உலகிலேயே முதன் முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். 'மிஸ்டர் வாட்சன் இங்கு வாருங்கள். உங்களை நான் பார்க்க வேண்டும்' (Mr. Watson-- come here. --I want to see you) என்பதுதான் அவர் தொலைபேசியில் பேசிய முதல் வாக்கியம். ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். 1877ல் பெல் தொலைபேசி கம்பெனியைத் தொடங்கினார்.ஹெலன் கெல்லர் பேச முயற்சி செய்தபோது உதவி செய்தார். ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர் உள்ளிட்ட 60 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கியதுடன், அவர்களுக்காக பல அமைப்புகளையும் தொடங்கினார். வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.