உள்ளூர் செய்திகள்

உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் 1997ஆம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ,'மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், படிப்பில் கவனம் செலுத்த முடியும். 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு, உடற்கல்வி, யோகா போன்றவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்பதை ஏற்க முடியாது. 50 மாணவர்களுக்கு மேல் படிக்கும், அனைத்துப் பள்ளிகளிலும் கௌரவ ஊதிய அடிப்படையிலாவது உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.' என உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !