உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலைகளும், விலங்குகளும்!

மனித - விலங்கு மோதல்களுக்குப் பல காரணங்கள் உண்டு. காடுகள் அழிப்பு, வாழிடம் அழிப்பு, வரையற்ற நகர்ப்புற வளர்ச்சி, இயற்கை வளங்கள் சுரண்டல் போன்றவை முக்கிய காரணங்கள். இன்றைய நிலையில் சாலை விபத்துகளில் விலங்குகள் இறப்பதும் ஒன்றாகிவிட்டது. சமீப ஆண்டுகளாகச் சாலைப் பயன்பாடு அதிகரித்ததோடு வாகனங்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. அதனுடன் விபத்துக்களும், மிக வேகமும் (Over speed) உயர்ந்துவிட்டன. மேலும், பல வனவிலங்கு சரணாலயங்களின் வழியாக நெடுஞ்சாலைகள் செல்வதும் சாலை விபத்துகளில் வனவிலங்குகள் இறப்பதற்கு வழி வகுத்துவிட்டது.குறிப்பாக முதுமலை, பந்திப்பூர், -வயநாடு வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விலங்குகள் இறப்பது தொடர்கதை. வனஉயிரின ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் விளைவாக, உச்ச நீதிமன்றம் பந்திப்பூரில் மட்டும் இரவுநேர போக்குவரத்தை முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விலங்குகளின் சாலை இறப்பைக் குறித்த ஓர் ஆய்வில், கீழ்க்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன:தவளைகள் மற்றும்நீர்நில வாழ்வன - 96ஊர்வன (பாம்பு போன்றவை) - 40பறவைகள் - 12பாலூட்டிகள் - 32மொத்தம் - 180இவை அனைத்தும் மூன்று மாத காலத்தில் கண்டவை. இறந்தவற்றில், சிறுத்தை, காட்டுப்பன்றி, மந்திகளும் அடங்கும். சமீபத்தில் சத்தியமங்கலம் சரணாலயம் அருகே யானை ஒன்றும், காட்டெருமை ஒன்றும் அரசு பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி இறந்தன.சரணாலயங்களின் வழியில் உள்ள சாலையில், வேகத் தடை இல்லை. அதனால், வாகன ஓட்டிகள் கட்டுப்பாடு இன்றிச் செல்கின்றனர். இக்காரணங்களால் யானை போன்ற பெரிய விலங்குகளும் இறப்பது சாதாரணமாகிவிட்டது.மேலும் வாழிடங்களை பிரிக்கும் வகையில் சாலைகள் அமைவதும், விபத்துக்களைக் கூட்டுகின்றன. ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வலசை மற்றும் உணவு தேடி விலங்குகள் வருவது இயற்கை. குறுக்கே ஒரு சாலை மற்றும் இடையறா போக்குவரத்தும் நிச்சயம் அவற்றுக்கு இடைஞ்சல்தான். மனிதர்களைக் காப்பதற்கு திட்டமிடுவது போல், விலங்குகளைக் காப்பதிலும் திட்டம் தேவை.- சு.சந்திரசேகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !