உள்ளூர் செய்திகள்

வரலாற்றுத் தடம்: யார் இந்த ராணி?

ரஜபுத்திர வம்சத்தில் 1524இல் பிறந்த ராணி இவர்.போர்க் கலைகளில் பயிற்சி பெற்றவர். வில்வித்தையிலும் குதிரை ஏற்றத்திலும் சிறந்தவர்.மாண்ட்லா (Mandla) பகுதியின் மன்னர் தல்பத் ஷாவை (Dalpat Shah) மணந்தவர்.1550ஆம் ஆண்டில் தல்பத் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி மாண்ட்லாவின் அரியணையில் ஏறினார்.ராணி, திறமையாக நாட்டை நிர்வாகம் செய்தார். இதனால் பக்கத்து நாடுகளில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் இவர் மீது பொறாமை ஏற்பட்டது. பெண் தானே எளிதில் வென்று விடலாம் என்ற எண்ணமும் தோன்றியது.மால்வா பகுதியை பஸ்பகதூர் (Baz Bahadur) என்ற மன்னர் ஆட்சி செய்தார் (ராணி பத்மாவதியின் கணவர்). அவர் மாண்ட்லா ராணியின் மீது போர்தொடுத்து வந்தார். போரில் ராணி பகதூரை விரட்டியடிக்க, பகதூர் தோற்றோடினார்.1564ஆம் ஆண்டில் மொகலாய அரசர் அக்பர், மாண்ட்லா மீது போர்தொடுத்தார். ராணி, அக்பரின் படையுடன் மோதினார். யுத்தக் களத்தில் யானை மீது அமர்ந்து போர் புரிந்தார். போரில் படுகாயமுற்ற ராணி, மொகலாயப் படையிடம் சிக்காமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். வீரத்துக்கும் தைரியத்திற்கும் எடுத்துக் காட்டாகத் திகழும் இந்த ராணி யார்?விடைகள்: ராணி துர்காவதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !