உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: ரூபாய் நோட்டு எது?

படத்தில் இருக்கும் இந்தக் கல் தேர் (Stone Chariot), இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது, விட்டலா என்ற கிருஷ்ணர் கோயிலின் கல் தேராகும். கர்நாடக மாநிலம் ஹம்பியில் இந்தக் கோயில் உள்ளது. விஜய விட்டலா (Vijaya Vithala) என்றும் இந்தக் கோயில் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலைக் கட்டியவர், இரண்டாம் தேவராயர். விஜயநகர மன்னரான இவர், கி.பி.1422 முதல் 1446 வரை ஹம்பியை ஆட்சி செய்தார். அதன் பிறகு கிருஷ்ணதேவராயர் காலத்தில், இந்தக் கல்தேர் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் இசையை எழுப்பக் கூடிய தூண்கள் இருப்பது மற்றுமொரு சிறப்பு. விஜயநகர கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இந்தக் கோயில் திகழ்கிறது.துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்தப் பழமையான கோயில். இந்திய அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்டு, தற்போது வரை புழக்கத்தில் உள்ள, ரூபாய் நோட்டு ஒன்றிலும் இந்தத் தேர் இடம்பெற்றுள்ளது. அந்த ரூபாய் நோட்டு எது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !