உள்ளூர் செய்திகள்

மசோதா சட்டமாவது எப்படி?

இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை, மேல்சபை என இரண்டு சபைகள் உள்ளன. இதில் மக்கள் சபை (Lok sabha- - லோக் சபா) கீழ் சபையாகவும், மாநிலங்களவை (Rajya sabha - ராஜ்ய சபா) மேல் சபையாகவும் கருதப்படுகிறது.மக்களவையில் மசோதா குறித்து, பலவாறு விவாதங்கள் நடைபெறும். இங்கு நிறைவேற்றப்பட்டால் மாநிலங்களவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதா குறித்த விவாதம் நடக்கும். மாநிலங்களவை, அந்த மசோதவை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யும். தேவைப்பட்டால் இரண்டு அவைகளும் கூடி விவாதிக்கும்.இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.கூட்டத்தொடர்கள்ஓராண்டில் 3 கூட்டத்தொடர்கள் நடக்கும். 1. நிதிநிலை கூட்டத்தொடர் (பிப்ரவரி - மே)ஆண்டின் தொடக்கத்தில், நிதிநிலை கூட்டத்தொடர் நடக்கும். இது மிகவும் முக்கியமான கூட்டத்தொடர். பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஆண்டில் இருந்து, ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல் செய்யப்படும், தனியாக தாக்கல் செய்யப்படமாட்டாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.நிதிநிலை அறிக்கை எனப்படும் பொது பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி பணிநாளில் தாக்கல் செய்யப்படும். இத்தொடரில், பல முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு, அதன்மீது விவாதங்கள் நடத்தப்படும். பட்ஜெட் தொடரில், உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு தேவைகள் குறித்து, துறை அமைச்சகத்தில் கோரலாம். 2. மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை- - செப்டம்பர்)மழைக்கால கூட்டத்தொடரில், பொது பிரச்னைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 3. குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர்- - டிசம்பர்)குறைந்த நாட்களே கொண்ட கூட்டத்தொடர் இது. முந்தைய கூட்டத்தொடர்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மசோதாக்கள், புதிய மசோதாக்கள், பிரச்னைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். மாநிலங்களவை - மக்களவைஅவையின் ஆயுட் காலம்: நிரந்தரம் - 5 ஆண்டுகள்பேர் உறுப்பினர் எண்ணிக்கை: 250 - 543 பேர்உறுப்பினர்கள்: தேர்தல் முறை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். - பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளால், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்உறுப்பினர் பதவிக்காலம்: 6 ஆண்டுகள் - 5 ஆண்டுகள்உறுப்பினர் குறைந்தபட்ச வயது: 30 - 25அவை தலைவர் துணை: குடியரசுத் தலைவர் - தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடரில் அவைத்தலைவர், உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார் நிதி மசோதா: இது மாநிலங்களவையில் தாக்கல் செய்ய முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகே, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு வரும்.மாநிலங்களவையின் திருத்தங்களை, மக்களவை விரும்பினால் மட்டுமே ஏற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !