உள்ளூர் செய்திகள்

நான் மண்புழு அல்ல; சாதுவான பாம்பு

பிராமினி பிளைண்ட் ஸ்னேக்Brahmini blind snake/Flowerpot snakeஅறிவியல் பெயர்: இண்டோடைப்லோஸ் பிராமினஸ்Indotyphlops braminusசராசரி நீளம்0 - 12 செ.மீ.பார்ப்பதற்கு மண்புழு போன்று இருந்தாலும் இப்பாம்பின் உடல் கரும் பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால், இதன் தோல் பளபளப்புடன் காணப்படும். இவை மண்புழுக்களைப்போல் அல்லாது பாம்புகளைப்போல ஊர்ந்து செல்லும். பழக்க வழக்கம்இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் வகை. பொதுவாக ஈரமான மண்/ சிறு இடுக்குகள்/ பூச்சிகளின் வசிப்பிடங்களில் இவற்றைக் காணலாம். மனிதர்களின் வசிப்பிடத்தில் தரைகளில் காணப்படும் பிளவுகளில் வாழும். இரவு நேர சஞ்சாரி. மழைக்காலங்களில் நம் கண்களில் தென்படும். மழைக்காலங்களைத் தவிர்த்து, மற்ற காலங்களில் மண்ணில் ஒளிந்து ஓய்வெடுக்கும்.உணவுசிறிய உருவம் கொண்டதால், இதன் இரை பெரும்பாலும், பூச்சிகளின் முட்டைகளே. எறும்புகளின் முட்டைகளையும் உண்ணும்.பாம்பு இனங்களிலேயே வித்தியாசமான (Asexual reproduction) இனப்பெருக்கமுறை கொண்ட பாம்பு இது. அதாவது ஆண் இனமே இல்லாத வகை. நன்கு வளர்ந்த பெண் பாம்பு, ஆண் பாம்பின் துணையில்லாமல் தாமாகவே முட்டையிடும். ஆங்கிலத்தில் இவ்வகை இனப்பெருக்கத்தை Parthenogenesis என கூறுவர்.மூடநம்பிக்கைபெரும்பாலும், இவ்வகைப் பாம்புகள் இரவு நேரங்களில் நாம் உறங்கும்போது, நம் காதுகளில் நுழைந்து நம்மைக் கொல்லும் என்று நம்புகின்றனர். இது தவறான நம்பிக்கை. மேலும், இந்தப் பாம்பு நம்மைத் தீண்டினால், வெண்குஷ்டம் வரும் என்று நினைக்கின்றனர். உண்மையில், இது ஒரு நஞ்சற்ற சாதுவான பாம்பு. வீடுகளில் இவ் வகைப் பாம்பை அடித்துக்கொல்லாமல் அப்புறப்படுத்தினால், விஷப் பூச்சிகளின் முட்டைகளை உணவாக உண்டு நம்மைக் காக்கும்.பல சமயங்களில் மூடநம்பிக்கைகளால் எறும்புகளை நசுக்குவது, பூரான், செய்யான் போன்றவற்றைத் தீயிட்டு கொளுத்துவது, பாம்புகளை அடிப்பது என தவறான போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம்.பெரிய உயிரினங்களைக் காப்பாற்ற உலகம் முழுவதும் பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால், இப்படிச் சின்னச்சின்ன உயிரினங்களை நாம் மறந்து விடுகிறோம்.இதுபோன்ற உயிரினங்களை நம்மைப் போன்ற சாமானியர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். - முனைவர். ந.ச.மனோஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !